பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் மற்றும் இந்திய வரலாற்றின் சின்னங்களைக் கொண்ட ‘பிரேர்னா ஸ்தலம்’ என்ற கட்டிடத்தினைக் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
இதில் முன்னதாக பாராளுமன்ற வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட M.K. காந்தி மற்றும் B.R. அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும் தற்போது ஒரே இடத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இந்த சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதே பிரேர்னா ஸ்தலம் நிறுவப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கு ஒரு பிரத்தியேக குழு உள்ளது.
இது நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கான குழு என்று அழைக்கப் படுகிறது.
இதில் இரு அவைகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இக்குழு மீண்டும் அமைக்கப்படவில்லை.