TNPSC Thervupettagam

பாராளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்

March 9 , 2024 264 days 274 0
  • பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில் சாதகமாக வாக்களிக்க அல்லது பேசுவதற்கு லஞ்சம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவாகும் குற்றவியல் வழக்குகளில் இருந்து பாராளுமன்றச் சிறப்புரிமைகள் அவர்களைப் பாதுகாக்காது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • தற்போது, சட்டமன்ற உறுப்பினர் லஞ்சம் கொடுப்பவருக்கு ஆதரவாகப் பேசினாலும் அல்லது வாக்களித்தாலும் குற்றவியல் வழக்கை எதிர்கொள்ள நேரிடும்.
  • 1998 ஆம் ஆண்டின் JMM லஞ்ச வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப் பட்ட, உச்ச நீதிமன்றத்தின் 25 ஆண்டு கால பெரும்பான்மையான கருத்தினை இந்த ஒருமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்ப்பானது முறியடித்துள்ளது.
  • லஞ்சம் வாங்கிய சபை உறுப்பினர்கள், சபையில் ஒப்புக் கொண்டபடி வாக்களித்தால் அல்லது பேசினால், அவர்கள் ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அந்தத் தீர்ப்பில் கூறப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்