TNPSC Thervupettagam

பாராளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதம் என இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

September 26 , 2019 1794 days 574 0

 

  • ஒருமித்த முடிவாக, இங்கிலாந்து உச்ச நீதிமன்றமானது "பிரிட்டனின் நாடாளுமன்றத்தை முடக்கியது" சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது.
  • முன்னதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரெக்சிட்டிற்கு (அக்டோபர் 31) முன்னதாக ஐந்து வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்திருந்தார்.
  • பிரிட்டனின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பொது மக்கள் சபையில் தனது அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் அவர் இந்த முடக்கத்தை அறிவித்தார்.
  • செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 14 வரை பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆலோசனையின் பேரில் அந்நாட்டு ராணியால் இங்கிலாந்து பாராளுமன்றம் முடக்கப்பட்டது.
  • இது இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெக்சிட் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற சபாநாயகரும் மேல் சபை அல்லது பிரபுக்கள் சபையும்  தீர்மானிக்க இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்