பாரிசு பருவநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகல்
January 23 , 2025 31 days 89 0
பாரிசு பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க நாட்டை விலக்கிக் கொள்வதற்கான செயலாக்க ஆணையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
டிரம்ப் தலைமையிலான முதல் ஆட்சியானது, 2017 ஆம் ஆண்டின் போது இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது, ஆனால் அந்த ஒரு நடவடிக்கையானது உடனடியாக அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் போது திரும்பப் பெறப்பட்டது.
அந்த உடன்படிக்கையிலிருந்து அதிகாரப் பூர்வமாக வெளியேறுவதற்கு அமெரிக்கா தற்போது ஓராண்டு காத்திருக்க வேண்டும்.
சுமார் 196 உறுப்பினர் நாடுகள் அங்கீகரித்த பாரிசு உடன்படிக்கை ஆனது சட்டப்பூர்வ பிணைப்பு கொண்ட ஒப்பந்தம் அல்ல.
தற்போது ஒப்பந்தத்தின் கீழ் வராத நாடுகளான ஈரான், ஏமன் மற்றும் லிபியாவுடன் அமெரிக்காவும் சேர உள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல், அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி 70% அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தற்போது உலகின் மிகவும் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளது.
2035 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தினை 60 சதவீதத்திற்கும் மேலாகக் குறைப்பதற்கு அமெரிக்கா கடந்த மாதம் ஒரு திட்டத்தை உருவாக்கியது.