TNPSC Thervupettagam

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவு

February 26 , 2021 1243 days 597 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆட்சியில் அமெரிக்காவானது பாரிஸ் ஒப்பந்தத்தில் அதிகாரப் பூர்வமாக மீண்டும் இணைந்துள்ளது.
  • முன்னதாக 2020 ஆம் ஆண்டு நவம்பரில், அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்காவானது அதிகாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது.
  • முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் காலநிலை ஒப்பந்தமானது 2015 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின் படி, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான உறுதிப்பாட்டை நாடுகள் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக கட்டுப்படுத்துவதே இந்த உலகளாவிய ஒப்பந்தத்தின் குறிக்கோளாகும்.
  • இதை 1.5° C ஆகக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்வதையும் இது நோக்கமாக கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்