TNPSC Thervupettagam

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024

September 4 , 2024 36 days 168 0
  • இந்தியாவின் பதக்கப் பட்டியலை அவனி லெகாரா (ராஜஸ்தான்) மற்றும் மோனா அகர்வால் (ராஜஸ்தான்) ஆகியோர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1ல் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றதன் மூலம் தொடங்கி வைத்தனர்.
  • பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் ப்ரீத்தி பால் (உத்தரப் பிரதேசம்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இது பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஓடுதளப் போட்டிகளில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் ஆகும்.
  • ஆண்களுக்கான 10 மீ காற்று கைத்துப்பாக்கி SH1 என்ற போட்டியில் மணீஷ் நர்வால் (அரியானா) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்