TNPSC Thervupettagam

பாரீஸ் மன்றம்

December 7 , 2023 226 days 127 0
  • இலங்கை அரசானது, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்கீட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பாரீஸ் கிளப் என்ற குழுவுடன் கடன் நடவடிக்கை திட்டத்தின் மீதான “கொள்கைசார் உடன்பாட்டை” சமீபத்தில் எட்டி உள்ளது.
  • பாரீஸ் கிளப் என்பது கடன் வழங்கீட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஒரு அலுவல் சாரா குழு ஆகும்.
  • இது இருதரப்பு கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத கடனாளி நாடுகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்காகப் பணியாற்றுகிறது.
  • அர்ஜென்டினா நாடானது பாரீஸ் நகரில் அதன் பொதுக் கடன் வழங்குநர்களை சந்திக்க ஒப்புக் கொண்ட 1956 ஆம் ஆண்டு கூட்டத்தில் இந்த மன்றமானது தோற்றுவிக்கப் பட்டது
  • பாரீஸ் கிளப் 22 நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இந்தக் குழுவில் இந்தியா உறுப்பினராக இல்லை.
  • பாரீஸ் கிளப் பொதுவாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டக் காலத்துடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்