இலங்கை அரசானது, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்கீட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பாரீஸ் கிளப் என்ற குழுவுடன் கடன் நடவடிக்கை திட்டத்தின் மீதான “கொள்கைசார் உடன்பாட்டை” சமீபத்தில் எட்டி உள்ளது.
பாரீஸ் கிளப் என்பது கடன் வழங்கீட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஒரு அலுவல் சாரா குழு ஆகும்.
இது இருதரப்பு கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத கடனாளி நாடுகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்காகப் பணியாற்றுகிறது.
அர்ஜென்டினா நாடானது பாரீஸ் நகரில் அதன் பொதுக் கடன் வழங்குநர்களை சந்திக்க ஒப்புக் கொண்ட 1956 ஆம் ஆண்டு கூட்டத்தில் இந்த மன்றமானது தோற்றுவிக்கப் பட்டது
பாரீஸ் கிளப் 22 நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்தக் குழுவில் இந்தியா உறுப்பினராக இல்லை.
பாரீஸ் கிளப் பொதுவாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டக் காலத்துடன் ஒத்துப் போகிறது.