TNPSC Thervupettagam

பார்காச்சிக் பனிப்பாறை - லடாக்

August 1 , 2023 486 days 303 0
  • லடாக்கில் உள்ள இமயமலைப் பார்காச்சிக் பனிப்பாறை வேகமாக உருகுவதால் மூன்று பனிப்பாறை ஏரிகள் உருவாகலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • அவை சராசரியாக 34 முதல் 84 மீட்டர் வரையிலான ஆழம் கொண்டதாக இருக்கலாம்.
  • இந்த ஏரிகள் இமயமலையில் பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்படும் ஒரு பெரு வெள்ளத்திற்கான சாத்தியமான மூல ஆதாரமாக இருக்கக் கூடும்.
  • இந்த ஒவ்வொரு ஏரியின் பரப்பளவு 43 முதல் 270 ஹெக்டேர் வரை இருக்கக் கூடும்.
  • பனிப்பாறையின் வருடாந்திர உருகும் விகிதம் ஆனது 1971 முதல் 1999 வரையில் (28 ஆண்டுகள்) கணக்கிடப் பட்டதை விட, 1999 மற்றும் 2021 (22 ஆண்டுகள்) ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 6 மடங்கு வேகமாக இருந்தது.
  • பனிக்கட்டி உருகுவதன் அளவானது சராசரியாக ஆண்டிற்கு சுமார் 12 மீட்டர் என்ற விகிதத்தில் இருந்தது.
  • பார்காச்சிக் பனிப்பாறையானது, சுரு நதி பள்ளத்தாக்கில் உள்ள மிகப் பெரியப் பனிப் பாறைகளில் ஒன்றாகும்.
  • இது மேற்கு இமயமலையின் தெற்கு சான்ஸ்கர் மலைத் தொடரின் ஒரு பகுதியாகும்.
  • இமயமலையின் ஒரு பகுதியான சான்ஸ்கர் மலைத் தொடர் ஆனது லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்