நாசாவின் பார்க்கர் என்ற சூரிய ஆய்வுக் கலமானது, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவியினால் இதுவரையில் பதிவு செய்யப்படாத வகையில் சூரியனுக்கு மிகவும் ஒரு நெருக்கமானப் பகுதியினை நெருங்கியுள்ளது.
இந்த ஆய்வுக் கலம் ஆனது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 6.1 மில்லியன் கிலோமீட்டர்கள் (3.8 மில்லியன் மைல்கள்) தொலைவில் நெருங்கி பறந்து சென்று உள்ளது.
சூரியனை நெருக்கமானப் பகுதியில் இருந்து ஆய்வு செய்வதற்காக பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் ஆனது 2018 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்தப் பார்க்கர் ஆய்வுக் கலம் ஆனது, இதற்கு முந்தைய விண்கலத்தை விட ஏழு மடங்கு அதிக நெருக்கமான தொலைவில் சூரியனை நெருங்கி, அதிகபட்சமாக 430,000 மைல் வேகத்தில் பயணித்தது.