TNPSC Thervupettagam

பார்க்கர் சூரிய ஆய்வு கலத்தின் புதிய வேகப் பதிவு

October 18 , 2023 405 days 335 0
  • நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது, சூரிய குடும்பத்தின் வழியாக மணிக்கு 635,266 கிலோமீட்டர்கள் (394,736 மைல்கள்) என்ற வியக்கத்தக்க வேகத்தில் பயணித்து உள்ளது.
  • இந்த வியத்தகு அளவிலான வேகமானது சூரியனைச் சுற்றிய அதன் 17வது சுற்றுப் பாதையின் போது எட்டப்பட்டது.
  • இது சூரியனின் மின்னேற்றம் செய்யப்பட்ட துகள் காற்று மற்றும் காந்தப்புலங்கள் பற்றிய முக்கியமான தரவுகளைச் சேகரிக்கிறது.
  • முக்கியமாக, இந்த வேகமானது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எட்டப்பட்ட அதன் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 586,863.4 கிலோமீட்டர்கள் (364,660 மைல்கள்) என்ற வேகத்தினை விஞ்சியுள்ளது.
  • இது, சூரியனின் அனல் நிறைந்த பிளாஸ்மா மேற்பரப்பில் இருந்து, 7.26 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிச் சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்