ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பார்ச்சூன் இதழின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் அதன் தரவரிசையை 88வது இடத்தில் இருந்து 86வது இடத்திற்கு மேம்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 155வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் ஆனது கடந்த மூன்று ஆண்டுகளில் 69 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு ஃபார்ச்சூன் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் ஒன்பது இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.
அவற்றுள் பின்வரும் ஐந்து நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகும் - IOCL, LIC, ONGC, BPCL மற்றும் SBI மற்றும் நான்கு நிறுவனங்கள் தனியார் துறை நிறுவனங்கள் ஆகும்.
வால்மார்ட் நிறுவனம் ஆனது தொடர்ந்து 11வது ஆண்டாக இப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.