தேர்தல் ஆணையமானது முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களுக்கு அவர்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்திட உதவிடுவதற்காக பார்வையாளர் செயலி எனப்படும் ஒரு கைபேசி செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.
அடுத்து நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 1800-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அலுவலர்கள் மற்றும் மத்திய சேவைப் பணிகளில் இருந்து சிலர் ஆகியோர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
அவர்கள் “பார்வையாளர் செயலி” மூலமாக அனைத்து முக்கிய அறிவிப்புகள், எச்சரிக்கைச் செய்திகள் மற்றும் அவசர செய்திகள் ஆகியவற்றை கிடைக்கப் பெறுவர்.
இச்செயலி அவர்களுக்கு தங்களது பணியிட நிலையை அறிதல், அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் தங்களது விவரங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும்.