TNPSC Thervupettagam

பார்வையாளர்களுக்கான நுழைவுச் சட்டம்

November 4 , 2019 1723 days 553 0
  • மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டம் 2016 ஆம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட திருத்தங்களுக்கு மேகாலயா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திருத்தமானது மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க மாநில உள் அனுமதி (Inner Line Permit - ILP) முறைக்கான கோரிக்கைகளை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டம் முன்பு குடியிருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருந்தது.
  • இந்தத் திருத்தமானது மாநிலத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட விரும்பும் பார்வையாளர்களுக்கு அவர்களது நுழைவு குறித்தப் பதிவைக் கட்டாயமாக்குகிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்தப் புதிய நுழைவு விதியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மாநில உள் அனுமதி முறை

  • மாநில உள் அனுமதி முறையானது வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைச் சட்டம், 1873 என்ற சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • தற்போது இந்த முறை நடைமுறையில் உள்ள மூன்று மாநிலங்களுக்குள் நுழைய நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த “வெளியாட்களுக்கு” சிறப்பு அனுமதி தேவைப்படும்.
  • இந்த முறையானது தற்போது அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்