TNPSC Thervupettagam

பாறைகளில் காணப்படும் பெரிய அளவிலான படிவு இடைவெளி

December 24 , 2023 337 days 299 0
  • அறிவியலாளர்கள் “பாறைகளில் காணப்படும் பெரிய அளவிலான படிவு இடைவெளி” குறித்த மர்மத்தைச் சமீபத்தில் வெளிக்கொணர்ந்துள்ளனர்.
  • இது பூமியின் கண்ட மேலோட்டில் பெரிய பகுதிகள் புவியியல் பதிவிலிருந்து விடுபட்ட ஒரு நிகழ்வு ஆகும்.
  • இந்த இடைவெளியானது, கோளின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருந்த “பனிப் பந்து பூமி” என்று அழைக்கப்படும் ஒரு காலக் கட்டத்தில் நிகழ்ந்த கடுமையான பனிப் பாறை அரிப்பிலிருந்து தோன்றியது.
  • இந்தப் பண்டைய காலத்தில் ஏற்பட்ட பனிப்பாறை அரிப்பு செயல்முறையானது, வண்டல் படிவில் ஒரு இடைவெளியை உருவாக்கி, சில குறிப்பிட்ட அளவிலான பாறைகளை நீக்குவதற்கு வழிவகுத்தது.
  • இந்தப் புவியியல் சார்ந்த வினோத நிகழ்வானது, 1869 ஆம் ஆண்டில் அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யான் பகுதியில் முதன்முதலில் காணப்பட்டது.
  • உலகளவில், பனிப்பாறை சார்ந்த செயல்பாடுகள் காரணமாக மிக வியக்கத்தக்க வகையில் 3-5 கிலோமீட்டர் அளவிலான பாறைகள் அரிக்கப்பட்டதாக சமீபத்திய ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
  • இது கேம்ப்ரியனுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த ஒரு பில்லியன் கன கிலோ மீட்டர் அளவிலான பொருட்கள் பதிவுகளில் இருந்து காணாமல் போக வழிவகுத்தது.
  • ஃபானெரோசோயிக் சகாப்தத்திற்கு முன்பான காலத்தில் முன்னர் நம்பப்பட்டதை விட மாபெரும் அளவிலான அரிப்பு ஏற்பட்டது.
  • ஃபானெரோசோயிக் என்பது புவியின் புவியியல் கால அளவீட்டில் உள்ள நான்கு புவியியல் யுகங்களில் உள்ள தற்போதைய மற்றும் சமீபத்திய சகாப்தம் ஆகும்.
  • இது 538.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தற்போது வரையிலான காலக் கட்டத்தை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்