TNPSC Thervupettagam

பாறைக் கோள் - 55 கேன்கிரி e

May 16 , 2024 63 days 205 0
  • நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் வளிமண்டலத்துடன் கூடிய பாறைகளால் ஆன கோள் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • 55 கேன்கிரி e அல்லது ஜேன்சன் என்று அழைக்கப்படும் இந்தக் கிரகம் ஆனது, நமது கிரகத்தை விட இரண்டு மடங்கு விட்டத்துடன் பூமியை விட சுமார் 8.8 மடங்கு பெரியது ஆகும்.
  • இது நமது சூரியக் குடும்பத்தின் உள் கோளான புதனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் 25 பங்கில் ஒரு பங்கு தொலைவில் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
  • இதன் விளைவாக, அதன் மேற்பரப்பு வெப்பநிலையானது சுமார் 3,140 டிகிரி பாரன்ஹீட் (1,725 டிகிரி செல்சியஸ்/2,000 டிகிரி கெல்வின்) ஆக உள்ளது.
  • இந்தக் கிரகம் ஆனது அநேகமாக சுழற்சி முறையினால் ஈர்க்கப் பட்டிருக்கலாம்.
  • அதாவது நிலவு பூமியை நோக்கிச் சுழன்று வருவதைப் போலவே அது எப்போதும் அதன் நட்சத்திரத்தை ஒரே புறம் எதிர்கொள்ளும் வகையிலேயே சுழன்று வருகிறது.
  • இது உயிர்கள் வாழ்வதற்கு அவசியமான திரவ நீரை தக்க வைக்க முடியாத அளவிற்கு அது மிகவும் சூடாக இருக்கிறது என்பதால் இந்தக் கோளில் உயிர்கள் வாழ முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்