பாலங்கள் கட்டமைப்புகளுக்கான மூலப் பொருட்கள் இருப்பு மற்றும் கட்டமைப்பு மதிப்பீட்டு அமைப்பு
April 24 , 2025 17 hrs 0 min 22 0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது, ஒரு மிகப் புதிய தரவரிசைப் நெறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது அவற்றின் கட்டமைப்புப் பாதுகாப்பைத் தீர்மானிப்பதற்கு வேண்டி அதன் உள் கட்டமைப்புச் வசதிகளைத் தரமிடுதலையும், அவற்றின் பராமரிப்பு மற்றும் அவற்றின் வழக்கமான கண்காணிப்புக்கான தீர்வு நடவடிக்கைகளைத் தேடுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய அமைப்பானது, பாலங்கள் கட்டமைப்புகளுக்கான மூலப் பொருட்கள் மற்றும் கட்டமைப்பு மதிப்பீட்டு அமைப்பு (BICRS) ஆனது ஆண்டிற்கு இரண்டு முறை பாலங்களின் விரிவான ஆவணமாக்கல், மதிப்பீடு மற்றும் ஆய்வு ஆகியவற்றை நன்கு மேற்கொள்வதைக் கட்டாயமாக்குகிறது.
இந்த மதிப்பீட்டு முறையின் ஒரு முக்கியப் பகுதியாக, அந்த முகமையானது அதன் அனைத்துக் கட்டமைப்புகளின் ஒருங்கிணைந்தக் களஞ்சியத்தைத் தயாரிப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீட்டு அடையாள எண் ஒதுக்கப்படும்.