உலகளாவிய அமைப்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முழு உறுப்பினர் அந்தஸ்தினைப் பெறுவதற்காக 2011 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை புதுப்பித்து மறு பரிசீலனை செய்யுமாறு பாலஸ்தீனிய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
பாலஸ்தீனமானது, ஹோலி சீ எனப்படுகின்ற ரோம் நாடு கொண்டுள்ளவாறு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு ஆகும்.
15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானத்து இந்த விண்ணப்பத்தை முதலில் மதிப்பிட்டு, ஐ.நா. உறுப்பினர் அந்தஸ்திற்கான தேவைகளை அது பூர்த்தி செய்கிறதா என்பதை ஆய்வு செய்கிறது.
இந்தப் பகுப்பாய்விற்குப் பின்னர் இந்த விண்ணப்பம் கைவிடப்படலாம் அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையில் முறையான வாக்கெடுப்பிற்கு முன்வைக்கப்படலாம்.
இந்த அமைப்பில் ஒரு நாடு உறுப்பினர் ஆவதற்கு ஒப்புதலுக்கு ஆதரவாக குறைந்தது ஒன்பது வாக்குகள் தேவை மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு அல்லது பிரிட்டனின் நிராகரிப்பு (வீட்டோ) அதிகார வாக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும்.