TNPSC Thervupettagam

பாலஸ்தீனிய அரசின் ஐ.நா. உறுப்பினர் விண்ணப்பம்

April 13 , 2024 97 days 227 0
  • உலகளாவிய அமைப்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முழு உறுப்பினர் அந்தஸ்தினைப் பெறுவதற்காக 2011 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை புதுப்பித்து மறு பரிசீலனை செய்யுமாறு பாலஸ்தீனிய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
  • பாலஸ்தீனமானது, ஹோலி சீ எனப்படுகின்ற ரோம் நாடு கொண்டுள்ளவாறு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு ஆகும்.
  • 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானத்து இந்த விண்ணப்பத்தை முதலில் மதிப்பிட்டு, ஐ.நா. உறுப்பினர் அந்தஸ்திற்கான தேவைகளை அது பூர்த்தி செய்கிறதா என்பதை ஆய்வு செய்கிறது.
  • இந்தப் பகுப்பாய்விற்குப் பின்னர் இந்த விண்ணப்பம் கைவிடப்படலாம் அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையில் முறையான வாக்கெடுப்பிற்கு முன்வைக்கப்படலாம்.
  • இந்த அமைப்பில் ஒரு நாடு உறுப்பினர் ஆவதற்கு ஒப்புதலுக்கு ஆதரவாக குறைந்தது ஒன்பது வாக்குகள் தேவை மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு அல்லது பிரிட்டனின் நிராகரிப்பு (வீட்டோ) அதிகார வாக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்