பாலஸ்தீனிய மக்களோடு ஒற்றுமைக்கான சர்வதேச நாள் – நவம்பர் 29
November 30 , 2017 2580 days 731 0
ஐ.நா.அவையின் பாலஸ்தீனிய மக்களோடு ஒற்றுமைக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் உலகம் ழுமுவதும் நவம்பர் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
1947-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பாலஸ்தீனத்தை (British Mandate of Palestine) இரு தனி நாடுகளாக பிரிக்க இயற்றப்பட்ட 181 (II) தீர்மானம் ஐ.நாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
181 (II) தீர்மானமானது, பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூத இஸ்ரேல் நாட்டையும், தனி பாலஸ்தீனிய அரபு நாட்டையும், ஜெருசேலம் நகரத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நகரமாகவும் உருவாக்க இயற்றப்பட்ட தீர்மானமாகும்.
முதல் உலகப் போருக்கு ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் தென் சிரியாவிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் 1920 முதல் 1948 வரை நிர்வகிக்கப்பட்ட தற்போதைய இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகள் அடங்கிய பகுதியே பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பாலஸ்தீனம் என்றழைக்கப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு இத்தினம் 1967-ல் நடைபெற்ற அரபு – இஸ்ரேலிய போரின் 50-வது ஆண்டை குறிக்கும் விதமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றது.