TNPSC Thervupettagam

பாலஸ்தீனிய மக்களோடு ஒற்றுமைக்கான சர்வதேச நாள் – நவம்பர் 29

November 30 , 2017 2550 days 712 0
  • ஐ.நா.அவையின் பாலஸ்தீனிய மக்களோடு ஒற்றுமைக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் உலகம் ழுமுவதும் நவம்பர் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
  • 1947-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பாலஸ்தீனத்தை (British Mandate of Palestine) இரு தனி நாடுகளாக பிரிக்க இயற்றப்பட்ட 181 (II) தீர்மானம் ஐ.நாவில் ஏற்றுக்  கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • 181 (II) தீர்மானமானது, பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூத இஸ்ரேல் நாட்டையும், தனி பாலஸ்தீனிய அரபு நாட்டையும், ஜெருசேலம் நகரத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குட்பட்ட  நகரமாகவும் உருவாக்க  இயற்றப்பட்ட தீர்மானமாகும்.
  • முதல் உலகப் போருக்கு ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் தென் சிரியாவிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் 1920 முதல் 1948 வரை நிர்வகிக்கப்பட்ட தற்போதைய இஸ்ரேல் மற்றும்  பாலஸ்தீனிய பகுதிகள் அடங்கிய பகுதியே பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட  பாலஸ்தீனம் என்றழைக்கப்பட்டது.
  • மேலும் இந்த ஆண்டு இத்தினம் 1967-ல் நடைபெற்ற அரபு – இஸ்ரேலிய போரின் 50-வது ஆண்டை குறிக்கும் விதமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்