இந்திய ஆய்வாளர்கள் புதிய தோல் கூழ்மமான 'பாலி-ஆக்சைம்' என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர், இது பொதுவாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளான ஆர்கனோபாஸ்பரஸ் கலவைகள் போன்றவை உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.
இந்தக் கூழ்மமானது இரசாயனங்களை செயலிழக்கச் செய்து, தோல் மற்றும் மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் ஆழமாக ஊடுருவுவதைத் தடுக்கிறது.
வேதியியல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட சிட்டோசனால் செய்யப்பட்ட இந்த பாலி-ஆக்சைம் கூழ்மமானது கடல்நண்டுகள், நண்டுகள் மற்றும் இறால் வகை மீன்கள் போன்ற ஓட்டுடலிகளின் ஓடுகளில் காணப்படுகிறது.
இந்தக் கூழ்மமானது பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் அறிவியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவ நிறுவன (InStem - Institute for Stem Cell Science and Regenerative Medicine) ஆராய்ச்சியாளர்களால் ஒரு நியூக்ளியோபிலிக் பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டது.