இந்தோனேஷியாவின் பாலியில் உள்ள செயல்பட்டுக் கொண்டிருக்கும் அகுங் எரிமலையானது மீண்டும் வெடித்துள்ளது. இது வானில் 2 கிலோ மீட்டர் உயரத்திற்கு எரிமலைக் குழம்புகளை உமிழ்ந்துள்ளது.
அகுங் மலையானது பசிபிக் கடலின் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது.
25,000 மைல்கள் நீளமுடைய இந்தக் குதிரைலாட வடிவம் கொண்ட நெருப்பு வளையமானது எரிமலைச் சங்கிலித் தொடருக்குப் பெயர் பெற்றது.
உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை இந்த வளையம் அமைந்த இடத்தில் நிகழ்கின்றது.