வரலாற்று சிறப்பு மிக்க பாலி யாத்ரா திருவிழாவானது ஒடிசாவின் கட்டாக்கில் கார்த்திகை பௌர்ணமி நிகழ்வை முன்னிட்டு ஒடிசா மாநில நிதியமைச்சர் ஷஷி பூஷன் பெஹ்ராவால் தொடங்கி வைக்கப்பட்டது.
10 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவானது ஒரிசாவின் மிகப்பெரிய கண்காட்சியாகும். மேலும் இது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களால் பார்வையிடப்படும்.
இது கட்டாக்கின் மகாநதி ஆற்றுப்படுகையில் நடைபெற்றது. பழங்கால சாதபாஸ் (பண்டைய மாலுமிகள்) வாணிபம் மற்றும் கலாச்சார விரிவாக்கத்திற்காக தொலைதூரத்திற்குப் பயணத்தைத் தொடங்கிய நாளை குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.