உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பாலின இடைவெளி அறிக்கையினை வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற 146 நாடுகளில், பாலினச் சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது.
இது கடந்த ஆண்டில் இருந்த இடத்தை விட எட்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் அறிக்கையில் இந்தியா 135வது இடத்தினைப் பெற்றிருந்தது.
இந்தியாவின் ஒட்டு மொத்தப் பாலின இடைவெளியில் 64.3% இடைவெளி நிவர்த்தி செய்யப் பட்டுள்ளது.
இந்தியா பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு ஆகிய பிரிவுகளில் 36.7% அளவிற்கு மட்டுமே சமநிலையை எட்டியுள்ளது.
இப்பட்டியல் இந்தியாவின் அண்டை நாடுகளை, பாகிஸ்தான் (142), வங்காளதேசம் (59), சீனா (107), நேபாளம் (116), இலங்கை (115) மற்றும் பூடான் (103) என்ற இடங்களில், தர வரிசைப் படுத்தியுள்ளது.
ஐஸ்லாந்து தொடர்ந்து 14வது ஆண்டாக உலகிலேயே மிகவும் பாலினச் சமத்துவமிக்க நாடாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15.1% பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் அரசியல் அதிகாரமளிப்புப் பிரிவில், இந்தியாவில் 25.3% சமநிலைப் பதிவாகியுள்ளது.
இது 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கைக்குப் பிறகு இந்தியா பெற்ற மிக உயர்ந்தத் தரவரிசையாகும்.
பொலிவியா (50.4%), இந்தியா (44.4%) மற்றும் பிரான்சு (42.3 %) உள்ளிட்ட 18 நாடுகளின் உள்ளூர் நிர்வாகங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ளன.