ஸ்பெயின் நாட்டுச் சட்டமன்றமானது 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்களது அடையாள அட்டையில் தங்களது பாலினத்தை மாற்றுவதற்கு அனுமதி வழங்கும் வகையிலான திருநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பாவில், 2014 ஆம் ஆண்டில் அத்தகைய உரிமையை வழங்கிய முதல் நாடு டென்மார்க் ஆகும்.
இந்தச் சட்டமானது, திருநர்களின் பாலின அடையாளத்தைச் சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையை அங்கீகரிக்கிறது.