TNPSC Thervupettagam

பாலின மாற்ற சட்டம் - போர்ச்சுக்கல்

July 18 , 2018 2322 days 694 0
  • ”அடையாள மாற்றம்” (Identity disruption) காட்டும் மருத்துவ அறிக்கை இல்லாமல் குடிமக்கள் தமது 16 வயதிலிருந்து தங்களது பாலினம் மற்றும் பெயரினை மாற்றிக் கொள்வதனை அனுமதிக்கும் சட்டத்திற்கு போர்ச்சுக்கல் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  • மூன்றாம் நபர் பாதுகாப்பு மற்றும் அடையாள மாற்றத்துக்கான சிகிச்சை ஆகியவை இன்றி திருநங்கை அடையாளத்திற்கான சுய நிர்ணய உரிமையை வழங்கிய ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், மால்டா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவற்றின் வரிசையில் ஆறாவது நாடாக போர்ச்சுக்கல் இணைந்துள்ளது.
  • ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுடன் பிறந்த குழந்தைகளின் மீதான பாலின அறுவை சிகிச்சைக்கும் இச்சட்டம் தடை விதிக்கிறது. எனவே, பிற்காலத்தில் அவர்களது பாலினத்தை அவர்களால் தேர்வு செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்