TNPSC Thervupettagam

பாலின மாற்றம் மற்றும் திருநர் திருமணங்கள்

July 27 , 2023 488 days 283 0
  • பாலினத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகளைத் தடை செய்யும் சட்டத்தை ரஷ்யா நிறைவேற்றியுள்ள நிலையில், இது ரஷ்யாவில் ஏற்கனவே போராட்டத்தில் உள்ள LGBTQ+ சமூகத்திற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தச் சட்டம் “ஒரு நபரின் பாலினத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு மேற் கொள்ளப் படும் மருத்துவச் சிகிச்சைகள்” மற்றும் அலுவல் ஆவணங்கள் மற்றும் அரசுப் பதிவேடுகளில் ஒருவரின் பாலினத்தை மாற்றிக் குறிப்பிடுவதைத் தடை செய்கிறது.
  • பிறவியிலிருந்தே காணப்படும் பல்வேறு குறைபாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கச் செய்வதற்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கு மட்டுமே இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
  • ஒரு நபர் “பாலினத்தை மாற்றி” செய்து கொண்ட திருமணங்களையும் இச்சட்டம் ரத்து செய்கிறது மற்றும் திருநர்கள் வளர்ப்புப் பெற்றோராக மாறுவதற்கும் இச்சட்டம் தடை விதிக்கிறது.
  • 2013 ஆம் ஆண்டில், சிறார்கள் மத்தியில் “மரபுக்கு மாறான பாலியல் உறவுகளுக்கு” எந்தவொருப் பொது வெளிப்பாட்டிற்கும் தடை விதிக்கும் ஒரு சட்டத்தை கிரெம்ளின் நிறைவேற்றியது.
  • 2020 ஆம் ஆண்டில், புடின் ஓரினச் சேர்க்கை வகை திருமணத்தைத் தடை செய்யும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார்.
  • கடந்த ஆண்டு, இளம் பருவத்தினர் மத்தியில் “மரபுக்கு மாறான பாலியல் உறவுகளுக்கு” தடை விதிக்கும் சட்டத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்