TNPSC Thervupettagam

பாலினச் சமத்துவத் தகவல் விளக்கப் படம் 2023 அறிக்கை

September 13 , 2023 310 days 273 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை ஆகியவற்றினால் ‘நிலையான மேம்பாட்டு இலக்குகளின் முன்னேற்றம்: பாலினச் சமத்துவ தகவல் விளக்கப் படம் 2023’ அறிக்கை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் பாலினச் சமத்துவத்தை அடைதல் என்ற இலக்கினை எட்டச் செய்வதற்கான பல நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில், உலகளவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 55.7% பேர் பெண்கள் ஆவர்.
  • இன்று ஒவ்வொரு பத்து பெண்களில் ஒருவர், அதாவது 10.3% பேர், வறுமை மிகுந்த நிலையில் வாழ்கின்றனர்.
  • தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டில் உலகின் 8% பெண்கள் இன்னும் கடுமையான வறுமை நிலையில் வாழ்வார்கள் என்று இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 129 மில்லியன் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் பள்ளிகளில் கல்வி பயிலாமல் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
  • தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டில் சுமார் 110 மில்லியன் பேர் பள்ளிகளில் கல்வி பயில இயலாமல் இருப்பர்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் பல முக்கியப் பகுதிகளில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்காக 48 வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டிற்கு 6.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
  • 2050 ஆம் ஆண்டில், உலகில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 1.6 பில்லியன் நபர்கள் இருப்பர் என்ற நிலையில் அவர்களில் 78.1% பேர் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பர்.
  • 27 நாடுகளில் மட்டுமே, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்குமான விரிவான கட்டமைப்புகள் உள்ளன.
  • தொழிலாளர் வளத்தில் பணிக்குச் செல்லும் வயதிலான ஆண்களின் பங்கு சுமார் 90 சதவீதமாக இருக்கையில், அதில் பணிக்குச் செல்லும் வயதிலான பெண்களின் பங்கு 61.4% மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்