TNPSC Thervupettagam

பாலினச் சமத்துவமின்மை மற்றும் மகளிர் புற்றுநோய்

October 20 , 2023 401 days 327 0
  • தி லான்செட் உலக சுகாதாரம் என்ற அமைப்பானது, “மகளிர், அதிகாரம் மற்றும் புற்றுநோய்” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், 70 வயதிற்குட்பட்ட சுமார் 5.3 மில்லியன் வளர் இளம் நபர்கள் புற்றுநோயால் இறந்துள்ள நிலையில் இந்த உயிரிழப்புகளில் 2.3 மில்லியன் பேர் பெண்கள் ஆவர்.
  • இந்த முன் கூட்டிய (அகால) மரணங்கள் ஆனது 182.8 மில்லியன் வருட வாழ்கால இழப்பின் (YLLs) அளவு உயர காரணமாயின.
  • இது அனைத்து வயது பிரிவிலும் புற்றுநோயினால் ஏற்பட்ட மொத்த வருட வாழ்கால இழப்புகளில் 68.8% ஆகும்.
  • பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் தடுக்கக்கூடிய முன்கூட்டிய வருட வாழ் கால இழப்புகளில் அதிக விகிதம் பதிவாகியுள்ளது (ஆண்களில் 70.3% மற்றும் பெண்களில் 65.2%).
  • எனினும், சிகிச்சை அளிக்கக் கூடிய வகையிலான முன்கூட்டிய வாழ்கால இழப்புகளின் விகிதம் ஆனது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருந்தது (பெண்களில் 34.8% மற்றும் ஆண்களில் 29.7%).
  • 2020 ஆம் ஆண்டில், புகையிலை, ஆல்கஹால், உடல் பருமன் மற்றும் நோய்த் தொற்றுகள் ஆகிய புற்றுநோய் உண்டாக்கக்கூடிய நான்கு முக்கியக் காரணிகளின் பாதிப்பினால் அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1.3 மில்லியன் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தியாவில் பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் சார்ந்த இறப்புகளில் கிட்டத்தட்ட 63% உயிரிழப்பானது, ஆபத்து காரணிகளைக் குறைத்தல், நோய் குறித்த ஆய்வு அல்லது ஆரம்பகால நோயறிதல் மூலம் தடுக்கப்பட்டிருக்கலாம்.
  • தகுந்த மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் 37% இறப்புகளைத் தடுத்து இருக்கலாம்.
  • இந்தியாவில் பெண்களில் அதிகம் ஏற்படும் மூன்று புற்றுநோய்கள் - மார்பக, கர்ப்பப் பை வாய் மற்றும் கருப்பைப் புற்றுநோய்.
  • ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
  • புற்றுநோய் சிகிச்சையில் காணப்படும் பாலினச் சமத்துவமின்மை காரணமாக, ஒரு பெண்ணின் உடல்நலப் பிரச்சினைகள் நிராகரிக்கப்பட்டன அல்லது புறக்கணிக்கப் பட்டன.
  • பாலினச் சார்பு மற்றும் பாகுபாடு காரணமாக பெண்கள் அதிகாரப் பதவியில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது மற்றும் அவர்களின் உடல் நலத்தைத் தீர்மானிப்பதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
  • பெண்களால் செலுத்தப்படாத புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டண மதிப்பு ஆனது  இந்தியாவின் தேசிய சுகாதார செலவினத்தில் சுமார் 3.66 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்