பாலினச் சமூக விதிமுறைகள் குறியீடு என அழைக்கப்படும் இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண் மற்றும் பெண் இருபாலரிடையேயும், "உலகம் முழுவதும் ஒரு சார்புப் பாலினச் சமூக விதிமுறைகள் பரவலாக காணப் படுகின்றன: ஏறக்குறைய 90% மக்கள் ஏழு சார்பு நிலைகளில் குறைந்தபட்சம் ஒரு சார்பு நிலையினைக் கொண்டுள்ளனர்".
69 சதவீத மக்கள் பெண்களை விட ஆண்கள் தான் "சிறந்த" அரசியல் தலைவர்களாக உருவாகின்றனர் என்று நம்புகிறார்கள்.
பெண்களை விட ஆண்கள் தான் சிறந்த வணிக நிர்வாகிகளாக விளங்குகிறார்கள் என்று 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
27 சதவீத மக்கள் மட்டுமே பெண்களும் ஆண்களுக்கு நிகரான உரிமைகளைக் கொண்டிருத்தல் ஜனநாயகத்திற்கு அவசியம் என்று நம்புகிறார்கள்.
25 சதவீதத்தினர் ஆண் தன் மனைவியை அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள்.