TNPSC Thervupettagam

பாலினத்திற்கு ஏற்றப் பருவநிலைக் கொள்கைகள்

October 18 , 2024 36 days 98 0
  • உலகளவில் பாலினத்திற்கு ஏற்ற பருவநிலை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • பாரீஸ் உடன்படிக்கையின் 81 சதவீத ஒப்பந்தத் தரப்பினர் அவற்றின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDC) பாலினம் சார்ந்த பல நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • இன்று வரை, 195 ஒப்பந்ததாரர்களின் மொத்த NDC பங்களிப்புகளின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது.
  • 62.3 சதவீத நாடுகள் அனைத்துப் பருவநிலை நடவடிக்கைகளிலும் பாலினத்தினைக் கருத்தில் கொள்வதை நெறிப்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன் வைத்துள்ளன.
  • 11.5 சதவீத நாடுகள், தகவமைப்பு நடவடிக்கையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை ஆதரிப்பதில் ஈடுபட்டுள்ள பாலினச் சமச்சீர் குழுக்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளை முன் வைத்துள்ளன.
  • சுமார் 55.7 சதவீத நாடுகள் பாலினச் சமத்துவத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
  • பிராந்தியத்தைப் பொறுத்து, வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகள் தற்போது 45-80 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர்.
  • வளர்ந்து வரும் நாடுகளில் பெண் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்