TNPSC Thervupettagam

பாலினம் குறித்த அறிக்கை 2022

September 14 , 2022 804 days 439 0
  • "நிலையான மேம்பாட்டு இலக்குகளின் முன்னேற்றம் (SDG): பாலினம் குறித்த அறிக்கை 2022" என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பெண்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 368 மில்லியன் ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 383 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிர வறுமையில் வாழ்வார்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • தற்போதைய முன்னேற்ற விகிதத்தில் முழு பாலினச் சமத்துவத்தை அடைய 300 ஆண்டுகள் ஆகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்தை ஒழிக்க, கடந்த தசாப்தத்தின் முன்னேற்றத்தை விட 17 மடங்கு வேகமாக முன்னேற வேண்டும்.
  • 2021 ஆம் ஆண்டில், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஆண்கள் தலைமையிலானக் குடும்பங்களில் உள்ள 20% அளவை ஒப்பிடுகையில், சுமார் 38% பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர் கொண்டுள்ளன.
  • சில நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் இனப்பெருக்க வயதுடையப் பெண்கள் (15-49) பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகலில் சில கட்டுப்பாடுகளுடன் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்