TNPSC Thervupettagam

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான மசோதாக்கள்

January 13 , 2025 2 days 59 0
  • தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது 2025 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்தம்) மசோதா மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை (திருத்தம்) மசோதா ஆகியவற்றினை நிறைவேற்றியுள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பதும், எண்ணிம மற்றும் மின்னணு தளங்களில் அவர்களைத் துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதும் இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.
  • பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்குத் தற்போதைய 10 ஆண்டுகளுக்குப் பதிலாக, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்க குற்றவியல் சட்ட மசோதா முன்மொழிகிறது.
  • பாலியல் வன்கொடுமை செய்பவர் காவல்துறையில் ஓர் அங்கத்தினராக இருந்தால், குறைந்தபட்ச கடுங்காவல் சிறைத் தண்டனையை 20 ஆண்டுகளாக இரட்டிப்பாக்க உள்ளது.
  • பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் 12 வயதுக்குட்பட்டச் சிறுமியாக இருந்தால், குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையும் அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் என்று இந்த மசோதா கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்