பாலியல் குற்றவாளிகள் மீதான தேசிய தரவுதளம்
September 22 , 2018
2261 days
679
- மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் பாலியல் குற்றவாளிகள் மீதான தேசிய தரவுதளத்தை நிறுவியிருக்கின்றது.
- இதன்மூலம் இவ்வாறான தரவுதளத்தை நிறுவியதில் உலகில் 9வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கும் நோக்கில் தேசிய பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டத்தின் ஒரு பூர்வாங்க முயற்சியாகும்.
- இத்தரவுதளம் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் பராமரிக்கப்படும். மாநில காவல்துறை 2005ம் ஆண்டு முதல் சீராக இத்தரவுதளத்தை புதுப்பிக்கும்.
Post Views:
679