TNPSC Thervupettagam

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம் – டிசம்பர் 17

December 19 , 2018 2168 days 451 0
  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினமானது ஆண்டுதோறும் டிசம்பர் 17ம் தேதியன்று பாலியல் தொழிலாளர்கள், அவர்களது நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் கூட்டாளிகளால் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது உலகம் முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் மீது வன்முறைகளுக்கு வழிவகுக்கின்ற மற்றும் அவர்கள் உள்ளடங்கியுள்ள சமூகங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்துகின்ற வகையில்
    • அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வெறுக்கத்தக்க குற்றங்கள்
    • சமூகத்தில் உள்ள களங்கத்தையும் பாரபட்சத்தையும் நீக்குவதற்கான தேவைகள்
ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.
  • முதன் முதலில் 2003-ல் அனுசரிக்கப்பட்ட இத்தினமானது டாக்டர் அன்னி ஸ்பிரிங்கிள் மற்றும் அமெரிக்காவின் பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைகள் நலச்சங்கமான 'பாலியல் தொழிலாளர்களை சென்றடையக்கூடிய திட்டம்’ (Sex Workers Outreach Project USA-Swop USA) ஆகியோரால் நிறுவப்பட்டது.
  • ஐரோப்பாவின் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான சர்வதேசக் குழுவானது பாகுபாட்டின் எதிர்ப்புக்கான குறியீடாக சிவப்புநிறக் குடையை 2005-ல் ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்