பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம் - ஜூன் 17
June 19 , 2024 315 days 268 0
1992 ஆம் ஆண்டு ரியோ புவி உச்சி மாநாட்டின் போது, பாலைவனமாக்கல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான மிகப்பெரிய சவால்களாக இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டன.
1994 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையினை UNCCD) நிறுவியது என்பதோடு இது சட்டப்பூர்வமானப் பிணைப்புத் தன்மை கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
2007 ஆம் ஆண்டில், UN பொதுச் சபையானது 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனங்கள் மற்றும் பாலைவன மாக்கலுக்கு எதிரான போராட்டத்திற்கான தசாப்தம் ஆக அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “United for Land. Our Legacy. Our Future” என்பதாகும்.