5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு “பால் ஆதார்” (Baal Aadhar) எனும் பெயரில் நீல நிற ஆதார் அடையாள அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குழந்தையின் பெற்றோருள் ஒருவரினுடைய ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். இதற்கு குழந்தையின் எத்தகு பயோமெட்ரிக் அடையாளத்தையும் வழங்கத் தேவையில்லை.
குழந்தை 5 வயதை எட்டும்போது குழந்தையினுடைய பயோமெட்ரிக் தகவல்களை சமர்ப்பித்து பின் வழக்கமான ஆதார் அட்டையைப் பெறலாம்.
இந்த நடைமுறையை 7 ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளத் தவறும் வேளையில் குழந்தையின் ஆதார் அட்டை ரத்து செய்யப்படும்.