TNPSC Thervupettagam

பால் கலப்படத்தைக் கண்டறியும் சாதனம்

April 3 , 2023 604 days 294 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக ஆராய்ச்சியாளர்கள் பாலில் உள்ள கலப்படத்தினை 30 வினாடிகளுக்குள் கண்டறியக் கூடிய வகையில் ஒரு முப்பரிமாண காகித அடிப்படையிலான ஒரு கையடக்கச் சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.
  • இந்தச் சோதனையை வீட்டிலேயே கூட மேற்கொள்ள முடியும்.
  • யூரியா, சலவைத்தூள், சலவைக்கட்டி, மாவுப்பொருள், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட் மற்றும் உப்பு உள்ளிட்ட பொதுவான கலப்படக் காரணிகளாகப் பயன்படுத்தப்படும் பல பொருட்களை இதன் மூலம் கண்டறிய முடியும்.
  • இந்தப் புதிய தொழில்நுட்பமானது மலிவு விலையிலானதாகும் என்பதோடு, தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் பால் கூழ்மங்கள்  போன்ற பிற திரவப் பொருட்களில் உள்ள கலப்படத்தினைக் கண்டறியவும் இதனைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்