TNPSC Thervupettagam
December 8 , 2018 2098 days 577 0
  • கால்பந்தின் பெருமைமிக்க கௌரவமான பாலோன் டி ஆர் (Ballon d’Or) விருதினை குரோஷியாவின் நடுகள வீரரான லூகா மாட்ரிக் பெற்றுள்ளார்.
  • குரோஷியாவை வரலாற்றுச் சிறப்புமிக்க பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வழி நடத்தியமை (பிரான்ஸால் தோற்கடிக்கப்பட்டது) மற்றும் ரியல் மாட்ரிட் கிளப்பின் 3-வது நேரடி சாம்பியன்ஸ் லீக் டிராபி வெற்றி ஆகியவற்றில்  அவரின் முக்கிய பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

  • இதன்மூலம் இவர் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் ஏறக்குறைய பத்தாண்டு கால ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்தார். இவர்கள் இருவரும் 2008-லிருந்து இந்த விருதுகளைத் தொடர்ந்துப் பெற்று வந்தனர்.
  • பெண்களுக்கான பாலோன் டிஆர் விருதினை நார்வேயின் அடா ஹெகர் பெர்க் (23) பெற்றார். இது பெண்களுக்கான பாலோன் டிஆர் விருது வழங்குதலின் முதல் பதிப்பாகும்.
  • இவர் பிரெஞ்சு அணியான லியான் உடன் இணைந்து 3 முறை பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றி பெற்றார் மற்றும் கடந்த பருவத்தில் போட்டித் தொடரின் சாதனையான 15 கோல்களை அவர் அடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்