மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் இந்திய தேசிய இணையப் பரிமாற்ற ஆணையம் (NIXI) ஆகியவை இணைந்து பாஷாநெட் (BhashaNet) என்ற இயங்கு தளத்தினை வெளியிட்டுள்ளன.
இணைய தளத்தின் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பல்வேறு உள்ளூர் மொழிகளில் அணுகக் கூடிய பன்மொழி இணைய சூழலை உருவாக்குவதற்காக இந்த இயங்கு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, பயனர்களுக்கு அவர்களின் சொந்த மொழிகளில் சேவை வழங்குவதன் மூலம், ஒரு உள்ளடங்கிய சேவை வழங்கீட்டினை மேம்படுத்துவதோடு, அதன் அணுகலையும் மேம்படுத்துகிறது.