TNPSC Thervupettagam

பாஷ்மினா கைவினைப் பொருள் - புவிசார் குறியீடு

October 8 , 2023 285 days 204 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியக் கைவினைப் பொருளான பசோலி பாஷ்மினா புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜம்மு பிரிவின் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பசோலி ஓவியம் மற்றும் சிக்ரி மரம் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றன.
  • பசோலி பாஷ்மினா, அதீத மென்மை, நுணுக்கம் மற்றும் இலகுவான எடை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற கையால் நெய்யப்படும் தயாரிப்பு ஆகும். இது வெப்பக் காப்பு பண்புகள் மற்றும் நீடித்து உழைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • பாஷ்மினா தயாரிப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சால்வைகள், காது உறைகள் (மஃப்லர்கள்), போர்வைகள் மற்றும் கூடை ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்