TNPSC Thervupettagam

பாஸ்கர் இராமமூர்த்தி குழு

August 19 , 2018 2295 days 691 0
  • மேம்படுத்தப்பட்ட ஜெ.இ.இ (Advanced JEE – Joint Entrance Examination) தேர்வில் மாற்றங்கள் செய்வதற்கு பரிந்துரைப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 5 நபர் கொண்ட குழுவை முன்மொழிந்துள்ளது.
  • இந்த ஆண்டு நுழைவுத் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் தகுதி பெற்றுள்ளதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவானது,
    • தேர்வு எழுதுபவரின் திறனை சோதனை செய்வதற்காக வலுவான மற்றும் அறிவியல்பூர்வமான நுழைவுத் தேர்வு அமைப்பை மேம்படுத்த இக்குழு அமைச்சகத்திற்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். மேலும் தேர்வு எழுதுபவர்கள் பயிற்சி நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் இக்குழு தனது பரிந்துரைகளை அளிக்கும்.
  • ஐஐடி – மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் இராமமூர்த்தி இக்குழுவிற்கு தலைமை வகிப்பார்.
  • இக்குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் –
  1. அபே கரந்திகர் (ஐஐடி – கான்பூரின் இயக்குநர்)
  2. வினீத் ஜோஷி (தேசிய போட்டித் தேர்வுகள் முகமையின் பொது இயக்குநர்)
  3. ஐஐடி பாம்பேயின் பேராசிரியர் கண்ணன் மவுடுகலயா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்