மேம்படுத்தப்பட்ட ஜெ.இ.இ (Advanced JEE – Joint Entrance Examination) தேர்வில் மாற்றங்கள் செய்வதற்கு பரிந்துரைப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 5 நபர் கொண்ட குழுவை முன்மொழிந்துள்ளது.
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் தகுதி பெற்றுள்ளதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது,
தேர்வு எழுதுபவரின் திறனை சோதனை செய்வதற்காக வலுவான மற்றும் அறிவியல்பூர்வமான நுழைவுத் தேர்வு அமைப்பை மேம்படுத்த இக்குழு அமைச்சகத்திற்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். மேலும் தேர்வு எழுதுபவர்கள் பயிற்சி நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் இக்குழு தனது பரிந்துரைகளை அளிக்கும்.
ஐஐடி – மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் இராமமூர்த்தி இக்குழுவிற்கு தலைமை வகிப்பார்.
இக்குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் –
அபே கரந்திகர் (ஐஐடி – கான்பூரின் இயக்குநர்)
வினீத் ஜோஷி (தேசிய போட்டித் தேர்வுகள் முகமையின் பொது இயக்குநர்)