பிரெஞ்சுப் புரட்சியின் போது, 1789 ஆம் ஆண்டில் பாஸ்டில் சிறைச்சாலை தாக்கப் பட்டதை நினைவு கூரும் வகையில் பிரெஞ்சு தேசிய தினம் (பாஸ்டில் சிறை தகர்ப்புத் தினம்) கொண்டாடப் படுகிறது.
பிரான்சு நாட்டில் கொண்டாடப்பட்ட பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்தியப் பிரதமர் ஒரு கெளரவ விருந்தினராக பங்கேற்றார்.
269 பேர் கொண்ட இந்திய முப்படை வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
சிந்து ரெட்டி தலைமையில் இந்திய விமானப் படையின் ஒரு படைப் பிரிவானது இதில் பங்கேற்றது.
இந்த ஆண்டு இரு நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.