இது 1789 ஆம் ஆண்டில் பாரீஸில் உள்ள பாஸ்டில் சிறை கோட்டம் மீதான தாக்குதலின் ஆண்டு நிறைவு தினமாகும்.
புதிய வரிகளை அறிமுகப் படுத்த வேண்டி, பதினாறாம் லூயிஸ், 1614 ஆம் ஆண்டில் கடைசியாக கூடியப் பெயரளவில் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பான அரசுப் பொது மன்றத்தினை 1788 ஆம் ஆண்டில் கூட்டினார்.
1789 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியன்று தேசியச் சட்டமன்றத்தினை நிறுவுமாறு பொது மக்கள் கிளர்ந்து எழுந்தனர்.
ஜூன் 20 ஆம் தேதியன்று இந்த அமைப்பானது வெர்செய்ஸில் உள்ள ராயல் டென்னிஸ் மைதானத்தில் பதவியேற்றது.
இந்த இயக்கத்தை ஒடுக்குவதற்காக வேண்டி பதினாறாம் லூயிஸ் பாரீஸ் நகரத்திற்கு அதிக எண்ணிக்கையிலான படை வீரர்களைத் திரட்ட தொடங்கினார்.
ஜூலை 14 ஆம் தேதியன்று பாரீஸில் உள்ள 14 ஆம் நூற்றாண்டின் கோட்டைச் சிறை ஆன பாஸ்டில் நோக்கி ஒரு பெரிய, ஆயுதமேந்திய குழுவினர் அணி வகுத்துச் சென்று தாக்கினர்.