TNPSC Thervupettagam

பாஸ்மதி வகை அல்லாத பச்சரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை

July 26 , 2023 359 days 229 0
  • உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆனது, சமீபத்தில் பாஸ்மதி வகை அல்லாத பச்சரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது.
  • இந்தியச் சந்தையில் பாசுமதி வகை அல்லாத பச்சரிசி வகைகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதையும், உள்நாட்டுச் சந்தையில் அவற்றின் மிகவும் அதிக விலை உயர்வைத் தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வட இந்தியாவில் உள்ள அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அதிக அளவில் பெய்து வரும் பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மழைப் பற்றாக் குறை போன்ற பல்வேறு வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தியானது பாதிக்கப் பட்டுள்ளது.
  • இது போன்ற சீரற்றப் பருவ நிலைகளால் அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீனாவிலும் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவிலான அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டு உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதி நாடாக இந்தியா திகழ்வதோடு, அரிசி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இந்தியா உள்ளது.
  • இந்திய அரிசி வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் சந்தைகள் ஆப்பிரிக்க நாடுகள் ஆகும்.
  • சீனா, இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முன்னணி அரிசி உற்பத்தி நாடுகளாகவும், உலக நாடுகளுக்கு அரிசி வகைகளை விநியோகம் செய்யும் முக்கிய நாடுகளாகவும் திகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்