இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய்க் கழகமானது உலகின் தூய்மையான பெட்ரோல் மற்றும் டீசலை நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் பிஎஸ் – IV எரிபொருள்களை விநியோகிக்கும் முதலாவது நிறுவனம் இதுவாகும்.
இதர எரிபொருள் விற்பனையாளர்களான பாரத் பெட்ரோலியக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் ஆகியவை படிப்படியாக பிஎஸ் - VI எரிபொருள்களை விநியோகிக்க இருக்கின்றன.
யூரோ – VI உமிழ்வு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த எரிபொருள்களின் விநியோகத்தைத் தொடங்குவதற்கான கால வரம்பை ஏப்ரல் 01 என்று மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.