பி.எஸ்.எல்.வி செயற்கைக் கோளின் (பி.எஸ்.எல்.வி-சி 51) 53வது திட்டமானது பிரேசிலின் அமேசானியா - 1 என்ற ஒரு முதன்மை செயற்கைக் கோளையும் 18 இணை செயற்கைக் கோள்களையும் ஏவியுள்ளது.
முதன்முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் ஒரு பிரேசில் செயற்கைக் கோள் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது.
இது 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் ஏவுதலையும் குறித்தது.
இந்த இணை செயற்கைக் கோள்களில் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பதின் சதீஷ் தவான் சாட் (SD SAT) என்ற செயற்கைக் கோளும் அடங்கும்.
இந்த விண்கலத்தின் மேல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பொறிக்கப் பட்டுள்ளது.
இது எஸ்டி அட்டையில் (SD card - பாதுகாக்கப்பட்ட டிஜிட்டல் அட்டை) “பகவத் கீதை” புத்தகத்தையும் சேர்த்து அனுப்புகிறது.
அமேசானியா - 1 செயற்கைக் கோளானது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் மூலம் வணிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திட்டமாகும்.