TNPSC Thervupettagam

பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் – மறைவு

November 11 , 2019 1722 days 759 0
  • பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சமூக & கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரை மேம்படுத்துவதில் முக்கியப் பணியாற்றியுள்ள இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் காலமானார்.
  • 1956 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சிற்பியாக இருந்தார்.
  • 1979 ஆம் ஆண்டில், பி.பி மண்டல் ஆணையத்தின் நியமனத்துடன் அவர் தொடர்புடையவர் ஆவார். இந்த மண்டல் குழுவானது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு நிறுவனங்களில் வேலைக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது.
  • 1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங் அரசு மண்டல் ஆணைய அறிக்கையை அமல்படுத்திய போது அவர் மத்திய மக்கள் நலத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார்.
  • பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் முதல் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
  • முஸ்லிம்களுக்கான பின்தங்கிய வர்க்க நிலை குறித்த கிருஷ்ணனின் அறிக்கையானது ஆந்திராவில் வேலை மற்றும் கல்வியில் 4% இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு அனுமதிப்பதற்கான அடிப்படையை உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்